வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது.

ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன் உலகளவில் பல தன்னார்வலர்களின் உதவியுடன் இயங்கிவருகிறது.

இப்படியான பல கட்டற்ற/திறந்தமூல மென்பொருட்களுக்கு மொழியாக்கம் என்பது ஒரு முக்கிய படிக்கல்லாகும். அதாவது, வேற்று மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருட்களை நமது மொழிக்கு மொழிபெயர்த்து அதைப் பலரும் பயன்படுத்தும் வகையில் கொண்டுசெல்வது முக்கிய நோக்கமாகும்.

அப்படியாக இன்று நாம் மொசில்லாவின் தமிழ் மொழியாக்கம் குறித்து இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.

சுட்டிகள்:
1. https://pontoon.mozilla.org/
2. https://mozillians.org/
3. https://groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join
4. https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta

காணொளி:

அடுத்து நாம் செய்யவேண்டியவை?

மொசில்லாவின் பலதரப்பட்ட திட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் பங்களித்து வரும் நிலையில், மொழிபெயர்ப்பில் வெகுசிலரே பங்களிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். இதில் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் தாய் மொழியை விடுத்து பிறமொழியை கற்றால் தான் சமூகத்தில் வாழ முடியும் என்று நமது பொதுபுத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. இதுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையும் கூட. மொசில்லா மட்டுமின்றி மற்ற கட்டற்ற மென்பொருள் திட்டங்களிலும் தமிழ் மொழியின் பங்களிப்பாளர்களும், அதன் பயனர்களும் குறைவு என்பது தான் சோகத்திலும் சோகம்.

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கு காணோம்

என்று பாடினான் பாரதி. ஆனால் இன்று சமூகம் மற்றும் சமூகம் சார்ந்த தனிநபரின் சிந்தனையோ வேறு. எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று தமிழில் கூறிக்கொள்ளும் அளவிற்க்கு மொழியின் முக்கியத்துவமும், மொழியின் மீதான பற்றும் நம்மவர்களிடத்தே உள்ளது.

இவையாவும் நாம் யோசித்துவிட கூடாது என்று நம்மை ஆண்டவர்கள் கவனத்தில் வைத்து இருந்தார்கள். அவர்களுடன் நாம் கண்மூடித்தனமாக நம்பும் ஊடகங்களும்.

சரி. நிலைமை இவ்வாறு இருக்க நாம் மொழியின் மீதான ஆர்வத்தை மக்களிடத்தே கொண்டு செல்வது சாத்தியமா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதனால் மொழியை நம்மால் காக்க முடியுமா? எனக் கேள்விகள் நம்முல் பல எழலாம்.

என்னிடம் உள்ள ஒரே பதில், மொழியை நாம் அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு சென்றாலே அதை அழியாமல் காக்க படலாம்.

ஒரு கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளனாக, என்னால் முடிந்தவரையில் தமிழ் மொழிபெயர்ப்புகளில் பங்களித்து வருகின்றேன். இதை இனியும் தொடருவேன்.

ஏன் இணையத்திற்க்கு பங்களிக்க வேண்டும்?

பலத்த தொழில்போட்டி நிலவும் இணைய சந்தையில், பல நிறுவனங்கள் பல கோடிகளை முதலீடு கொண்டு மொழி பெயர்ப்பினை செய்து அவர்களின் சந்தையை விரிவாக்கி வருகின்றனர். இப்படியான சூழலில் நாம் திறந்த மூல மென்பொருளாக, இணையத்தில் இணைய சமத்துவத்திற்க்காகக் குரல் கொடுத்துவரும் Mozilla Firefox-ன் திட்டங்களுக்குப் பங்களிக்கலாம். மேலும் இன்று உலகம் இணையத்தில் சுருங்கிவிட்டது. தமது தேடலைப் பூர்த்திசெய்யும் எதுவாயினும் மனிதன் அதை ஏற்றுக்கொள்கின்றான். அவ்விடத்தில் நாம் மொழியின் இருப்பை கொண்டுசெல்வது நமது கடமைகளுள் ஒன்று.

சரி? நமது உடனடி திட்டம் என்னவாக இருக்க வேண்டும்?

2017-ல் நமது உடனடி தேவையாக எடுத்துகொண்டு நாம் செய்யவேண்டியது,

  1. Mozilla.org தளங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது.
  2. Firefox for Android, Desktop பதிப்புகளின் புதிய முதன்மைத் தொடர்களை மொழிபெயர்ப்பது.
  3. புதிய பங்களிப்பாளர்களை உருவாக்குவது.

இதன் மூலம் நமது நீண்ட நெடிய தேவைகளான,

  1. Firefox உலாவிகளின் தமிழ் இடைமுகப்பு பயன்பாட்டை அதிகரிப்பது.
  2. கல்வி நிறுவனங்களையும், அரசு அலுவலகங்களையும் அனுகி அவர்களுக்குத் தமிழ் மொசில்லா உபயோகிப்பது குறித்து பயிற்சி அளித்தல், அவர்களைத் தொடர்ந்து உபயோகிக்க ஊக்கமளிப்பது.

இவை யாவும் சாத்தியமா?

இதைச் செய்வதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம்.

நாம் என்று பயன்படுத்தியதற்க்கு காரணம் : தனிமனித சிந்தனையைச் சமூக சிந்தனையாக மாற்ற வேண்டிய நேரமிது….

Firefox OS apps Localization for Indic Language (Online Event)

Date : 28-Mar-2015 to 29-Mar-2015
Main goal is to translate Firefox OS apps which are available in Transifex(Mozilla Tech Evangelism).

Viswaprasath Organized this event. He assigned me as a Coordinator for Tamil Language. We fixed the goal to Complete all the apps which are not completed. Based on this condition we found 10 apps that needs to done. So i invite Mr. Mohammed Ammar and Mr. Sathish Kumar (who are the Wikipedia Contributors) to join with us. Totally 9members included their name in Etherpad contributors section. But unfortunately only 6members participated. Event started at 08.00am on 28th March. Viswaprasath, Mohammed Ammar, Sathish Kumar, Mohammed Adam actively involved from the beginning. At the end of first day we translated 6 apps. Next day 5members participated and started translation actively. I reviewed all the apps which are translated on Saturday(28-Mar-2015). At the end of the day(29-Mar-2015) we were closed to our goal. Unfortunately we found Weboffice source string available in Spanish(not in English). So we decided to omit the Weboffice app from the list. Except Weboffice our team finished all the apps. Finally we achieved our goal.

I thanks to Viswaprasath to organize this event. And I also thank to Mr. Mohammed Ammar and Sathish Kumar to help us.

MoPad Link : Firefox OS Apps l10n Team Details

Tamil MoPad Link : Tamil Apps Details

WoMoz l10n Event

Date : 15-Mar-2015
First of all I thanks to Mohammed Adam, Subashini and Sathish. These people did the background work to make this event successful. And I’m also thank to Mr. Karkee(Founder of Jeevika Academy), Who gave the support to host the event in Jeevika Academy.

Event started with general intro about Free Software Philosophy. This 20min speech given by Mohammed Adam. Then Mr. Karkee talk about History of International women’s day and Role of Women in this Society.

Laterally these two people handover the session to me. I started with Technology and Women in technology. Later I went into Mozilla and its project. Then I raised the question about importance of Language to a human. Simultaneously I fired another question importance of mother tongue to a human. This two question make the participants to think more. Ultimately they started to answer with their own point about language. From this involvement I moved the session to Mozilla Tamil Localization and Translation.

First I took Mozilla pootle project then moved to Transifex project and finally Support Mozilla translation.

At-last we distributed some books about feminism to the participants who are all active in throughout the session. Then distributed the Mozilla swags to the participants.

Total Number of Participants = 49 + 6 Volunteers from local Community.
Volunteers:
1. Mohammed Adam
2. Subashini
3. Satheesh
4. Priyadharshini
5. Priyadharshini
Thanks to the Volunteers…

Event Photos uploaded here